தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான காதல் கதை ஒரு கொடூர கொலையில் வந்து முடிந்துள்ளது. குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ இந்த கொலையை செய்யவில்லை. கல்லூரி தன்னுடன் படித்த நண்பனையே, காதல் என்ற பெயரில் அந்த இளைஞர் கொலை செய்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட அந்த நபர், தனது காதலிக்கு தொடர்ந்து போனில் கால் செய்ததாலும், மெசேஜ் செய்ததாலும் குற்றவாளி இந்த முடிவை எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, போலீசார் கொலையாளியை கடந்த ஒருவாரமாக தேடிவந்த நிலையில், கொலையாளி ஹரிஹர கிருஷ்ணன் (22) நேற்று முன்தினம் (பிப். 24) சரணடைந்துள்ளார். போலீசார் கொலைசெய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
கொலையான நபரின் தலையை கொலையாளி தனியாக எடுத்துள்ளதாகவும், அவரின் ஆணுறுப்பு, இதயத்தை அகற்றியுள்ளதாகவும், விரல்களை வெட்டியுள்ளதாகவும் ஹைதராபாத் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர கொலைக்கு காரணம் கல்லூரி காதல் என்று சொன்னால் நிச்சயம் யாராலும் நம்பவே முடியாது.
மேலும் படிக்க | Video: காண்டான காண்டாமிருகங்கள்... சண்டையை போட்டோ எடுத்த பயணிகளை ஓடவிட்ட சம்பவம்!
முக்கோண காதல் கதை?
ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான தில்சுக்நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் கொலைசெய்யப்பட்ட நவீனும், கொலையாளி ஹரிஹர கிருஷ்ணனும் சேர்ந்து படித்து வந்துள்ளனர். நண்பர்களான இவர்களுக்கு ஒரே பெண்ணை காதல் செய்துள்ளனர். இதில், முதலில் நவீன் அந்த பெண்ணிடம் பேசி, தனது காதலை தெரிவிக்கவே நவீனும், அந்த பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்து வந்துள்ளனர்.
அதன்பின், நவீனும் அந்த பெண்ணும் பிரிந்துவிட்டனர். நவீன் அந்த பெண்ணை விட்டு பிரிந்துவிட்டதால், ஹரிஹர கிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஹரிஹர கிருஷ்ணனின் காதலை அந்த பெண் ஏற்றுக்கொண்டார். அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணும், நவீனும் காதல் பிரிவுக்கு பின்னரும் தொடர்பில் இருந்துள்ளனர்.
வாட்ஸ்அப்பில்...
நவீனும் அந்த பெண்ணும் தொடர்ந்து போனில் பேசி வந்ததாகவும், மெசேஜ் வழியாக உரையாடி வந்ததும் ஹரிஹரனுக்கு தெரியவந்துள்ளது. இதனால், அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் ஹரிஹர கிருஷ்ணன், நவீனை கொடூரமாக கொலைசெய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பிப். 17ஆம் தேதி, நவீனுக்கும், ஹரிஹர கிருஷ்ணனுக்கும் நடந்த கைக்கலப்பில் நவீன் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவரை தூக்கிலிட்டு ஹரிஹர கிருஷ்ணன் கொலைசெய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதனை புகைப்படம் எடுத்த ஹரிஹர கிருஷ்ணன், தான் காதலிக்கும் பெண்ணிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ