இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று! புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது IAF

IAF Uniform: இந்திய விமானப்படை நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 8, 1932 இல் இந்திய விமானப்படை நிறுவப்பட்டது, இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 8, 2022, 12:11 PM IST
  • ந்திய விமானப்படை நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது
  • அக்டோபர் 8, 1932 இல் இந்திய விமானப்படை நிறுவப்பட்டது
  • இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று
இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று! புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது IAF title=

புதுடெல்லி: இந்திய விமானப்படை நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. முப்படைகளில், இந்திய வான்வெளியைப் பாதுகாக்கும் இந்திய விமானப் படையானது, இயற்கைப் பேரிடர்களின் போது மீட்புப் பணிகளை மேற்கொண்டு மிகவும் முக்கிய பணியாற்றுகிறது. தேசத்தை காக்கும் இந்திய விமானப்படையின் (IAF) விமான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அக்டோபர் 8அம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 8, 1932 இல் இந்திய விமானப்படை  நிறுவப்பட்டது.

அந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும், இந்திய விமானப்படை தினம் அக்டோபர் எட்டாம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு IAF இன் 90-வது ஆண்டு விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும், இந்த தினம் ஒரு பெருமைக்குரிய விஷயமாக கொண்டாடப்படுகிறது, இது மக்களிடையே தேசபக்தியை தூண்டுகிறது.

மேலும் படிக்க | e-rupee: பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசின் முதல் டிஜிட்டல் ரூபாய்

இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாளில் புதிய போர் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சீருடையில் டிஜிட்டல் கேமோஃப்ளேஜ் பேட்டர்ன் மற்றும் வித்தியாசமான துணி மற்றும் வடிவமைப்பு உள்ளது. இது சண்டிகரில் நடைபெறும் விமானப்படை தின அணிவகுப்பில் விமானப்படைத் தளபதியால் வெளியிடப்பட்டது. 

புதிய சீருடை இந்த ஆண்டு ஜனவரியில் ராணுவத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் முறையைப் போலவே இருக்கிறது. புதிய IAF சீருடையில் நிறங்கள் வழக்காமானவற்றை விட சற்று வித்தியாசமாக இருக்கிறது., விமானப்படையின் பணிச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தற்சமயம், விமானப்படையில் தரைப்படைப் பணிகளில் பயன்படுத்தப்படும் உருமறைப்பு முறை எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் இராணுவம் பயன்படுத்தியதைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நித்தியானந்தா அளிக்கும் கைலாசா விருதுகள்: தர்மரட்சகர் விருது பெறும் திருச்சி சூர்யா சிவா

இந்திய விமானப்படையின் புதிய சீருடைகளின் சிறப்பம்சங்கள் இவை:

புதிய சீருடை தனித்துவமானது. இது இன்றைய ஆடை கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அணிவதற்கு பாந்தமாக இருக்கிறது.

புதிய சீருடை, வீரர்கள் தங்களை இயற்கையில் சிறப்பாக மறைத்துக்கொள்வதற்கு வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மென்மையான துணி இலகுவானதாக உள்ளது. இலகுவானதாக, நெகிழ்ச்சித் தன்மைக் கொண்ட இந்த ஆடையின் துணிதின் தன்மை உறுதியானதாகவும் இருக்கும். நீண்ட நேரம் அணிந்தாலும் உறுத்தாமல் வசதியாக இருக்கும்.

இந்த சீருடையை வெவ்வேறு நிலப்பரப்புகளில், வெவ்வேறு காலநிலையிலும் அணியலாம். பனி படர்ந்த காஷ்மீரின் மலைப்பகுதி முதல், கடற்கரை பகுதிகளிலும் இந்த புதிய சீருடையை அணிவது வசதியானதாகவே இருக்கு. மழை அதிகமாக பொழியும். வடகிழக்கு காட்டுப் பகுதிகளுக்கும், ராஜஸ்தானின் பாலைவனத்திற்கும் கூட பொருத்தமாக இருக்கும் புதிய சீருடை என்று தெரிகிறது.  

மேலும் படிக்க | இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News