58 நாடுகள் பாகிஸ்தானை ஆதரிப்பதாக இம்ரான் கான் கூறுகிறார், ஆனால் யு.என்.எச்.ஆர்.சி 47 உறுப்பினர்களை மட்டுமே உள்ளனர்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குபாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) 58 நாடுகள் பாகிஸ்தானுடன் இணைந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; செப்டம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தானுடன் இணைந்த 58 நாடுகளை நான் பாராட்டுகிறேன். இந்தியாவுக்கான சக்தியைப் பயன்படுத்துவதை நிறுத்தவும், முற்றுகையை நீக்கவும், பிற கட்டுப்பாடுகளை நீக்கவும், காஷ்மீர் உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் மற்றும் யுஎன்எஸ்சி தீர்மானங்கள் மூலம் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கவும்" அவர் ட்வீட் செய்தார்.
இதை தொடர்ந்து பதிவிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில்; UNHRC தீர்மானங்கள், சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளுக்கு ஏற்ப காஷ்மீர் சர்ச்சைக்கு அமைதியான தீர்வு காண மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை நான் வரவேற்கிறேன்" என மற்றொரு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில்; "அவர்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலை வழங்குமாறு நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். எங்களிடம் பட்டியல் இல்லை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஐநா-வில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 47 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் 60 பேர் என்று கூறுகின்றனர். எனவே, அவர்கள் பரந்த சர்வதேச சமூகத்திற்கு அப்பால் சென்றுவிட்டனர்" என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு ஆதரவு கிடைத்திருந்தால், நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது UNHRC இன் ரகசிய அமர்வு அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.