2ஜி வழக்கில் தேசத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்!!

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கி‌ல் தேசத்திற்கு சார்பாகத்தான் தீர்ப்பு வரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

Last Updated : Dec 5, 2017, 01:38 PM IST
2ஜி வழக்கில் தேசத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்!! title=

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கி‌ல் தேசத்திற்கு சார்பாகத்தான் தீர்ப்பு வரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கு, டில்லி சி.பி.ஐ. சிறப்புகோர்ட்டில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி சைனி, தீர்ப்பு தேதி இன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு விபரங்கள் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி தெரிவித்தார்.

இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வ‌ழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மேலும் தேசத்திற்கு ஆதரவாகவே இந்த தீர்ப்பு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Trending News