டெல்லியில் நடைபெறவிருந்த “இந்தியா கூட்டணி” கூட்டம் ஒத்திவைப்பு! அடுத்தது எப்போ?

INDIA Alliance Meeting Postponed: பல முக்கிய தலைவர்கள் டிசம்பர் 6 ம் தேதி கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாததால், இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 5, 2023, 08:47 PM IST
டெல்லியில் நடைபெறவிருந்த “இந்தியா கூட்டணி” கூட்டம் ஒத்திவைப்பு! அடுத்தது எப்போ? title=

I.N.D.I.A. Alliance Meeting: இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளின் தலைவர்கள் கலந்துக்கொள்ள முடியாததால், இன்று நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வரும் டேசம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.,) தலைவர் லாலு யாதவ் (Lalu Yadav) இன்று (டிசம்பர் 5, செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். முன்னதாக  ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டிசம்பர் 6 ஆம் தேதி (புதன்கிழமை) டெல்லியில் 'இந்தியா கூட்டணி' கூட்டத்திற்கு (I.N.D.I.A Alliance Meeting) அழைப்பு விடுத்திருந்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால், நாளை நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. 

மேலும் படிக்க - தேர்தல் அரையிறுதி வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா.. இதுவரை நடந்தது என்ன?

மிக்ஜாம் புயல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க முடியவில்லை

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு காரணமாக  நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் (Nitish Kumar) உடல்நலக்குறைவு காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாது எனவும், முதல்வர் நிதிஷ்குமாருக்கு பதிலாக ஜேடியு சா(Janata Dal United) சார்பாக லல்லன் சிங் மற்றும் சஞ்சய் ஜா ஆகியோர் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள் எனக் கூறப்பட்டது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா வீட்டில் திருமண விழா

அதே நேரத்தில், மம்தா பானர்ஜியைப் பற்றி பேசினால், அவருக்கு அடுத்து ஒரு வாரத்திற்கான பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் அவரது வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி உள்ளது. அதன் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க - மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

அகிலேஷ் யாதவ் மற்றும் ஹேமந்த் சோரன் கலந்துக்கொள்ளவில்லை

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் (Akhilesh Yadav) இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவருக்குப் பதிலாக எஸ்பி கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ் கலந்துக் கொள்வார் எனக் கூறப்பட்டது. அதேபோல ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் (Hemant Soren) கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தகவல்.

4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் நான்கு மாநிலத்தில் தோல்வியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் 'இந்தியா கூட்டணி' கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. தெலுங்கானாவில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற முடிந்தது.

இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணியின் கடைசிக் கூட்டத்தை சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் 5 மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.

மேலும் படிக்க - INDIA Alliance: இந்தியா கூட்டணியில் விரிசல்? 3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News