பாகிஸ்தான் தேசிய தின விழாவில் பங்கேற்க, விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.
பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தூதரகத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நிகழ்ச்சிக்கு இந்திய அரசு சார்பில் யாரையும் அனுப்புவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். மேலும் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பாகிஸ்தான் தேசிய தினம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அங்குள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியா செல்ல மாட்டார் எனவும், ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.