சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் திருத்தம்! பாகிஸ்தானிற்கு கெடு விதித்த இந்தியா!

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க மோடி அரசு முடிவு செய்து பாகிஸ்தானிற்கு சுற்றறிக்கை அனுப்பி, 90 நாட்கள் கெடு விதித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2023, 03:43 PM IST
  • பரஸ்பரம் இணக்கமான வழியைக் கண்டறிய இந்தியா பலமுறை முயற்சித்தது.
  • இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம்.
  • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) மாற்றியமைப்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் திருத்தம்! பாகிஸ்தானிற்கு கெடு விதித்த இந்தியா! title=

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக தீர்வு எடுட்டுவதற்கான நடவடிக்கை, 5 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள நிலையில், அதில் திருத்தம் செய்யக் கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1960ம் ஆண்டு கராச்சியில் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய இஸ்லாமாபாத்தை புது தில்லி முதன்முறையாகக் கோரியுள்ளது.

இது வெளியான தகவல்களில், " 1960ம் ஆண்டு செப்டம்பரில் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) மாற்றியமைப்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது IWT ஒப்பந்த பிரிவு XII (3) விதியின் படி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பிடிவாதத்தினால், உடன்படிக்கையை மாற்றுவதற்கான அறிவிப்பை இந்தியா வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது " என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், ஒப்பந்தத்தின் "பொருள் நீதியிலான விதி மீறலை சரிசெய்ய" 90 நாட்களுக்குள் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது, மேலும் "கடந்த 62 ஆண்டுகளில் கற்றுக்கொண்ட பாடங்களை இணைத்து, ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் வேண்டும்" என்று ஆதாரங்கள் கூறியுள்ளன.

மேலும் படிக்க | உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்... நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை!

1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், 3 கிழக்கு நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீர் தடையின்றி இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டது, அதே நேரத்தில் 3 மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீர் பாகிஸ்தானுக்கு செல்கிறது. கூடுதலாக, வடிவமைப்புக்கான குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு, 3 மேற்கு ஆறுகளில் நதி நீர் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் நீர்மின்சாரத்தை உருவாக்க இந்தியாவிற்கு உரிமை உள்ளது. மேற்கத்திய நதிகளில் இந்திய நீர்மின் திட்டங்களை வடிவமைப்பதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் கீழ் தொழில்நுட்ப ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சர்ச்சை தீர்க்கும் வழிமுறைகள் இந்தியா அறிவிப்பை வெளியிட வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிஷெங்கங்கா மற்றும் ரேட்டில் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்களுக்கு (HEPs) தொழில்நுட்ப ஆட்சேபனைகளை ஆராய ஒரு நடுநிலை நிபுணரை நியமிக்குமாறு பாகிஸ்தான் கோரியது. அடுத்த ஆண்டு, அதாவது 2016, பாகிஸ்தான் ஒருதலைப்பட்சமாக "நடுநிலை நிபுணர்" என்ற செயல்முறையை பின்பற்றாமல், விதிகளை மீறும் வகையில், "நடுவர் நீதிமன்றம்" மூலம் ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என முன்மொழிந்தது. இதற்கிடையில், இந்த விஷயத்தை நடுநிலை நிபுணரிடம் அனுப்புமாறு இந்தியா தனித்தனியாக கோரிக்கை விடுத்தது. ஒரே பிரச்சினையில் இரண்டு ஒரே நேரத்தில் செயல்முறைகளை பின்பற்றுவது அடிப்படையில் ஒரு சட்ட சிக்கலை உருவாக்குகிறது என இந்தியா கூறியது.

மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!

இது குறித்து வெளியான தகவல்களில் "பாகிஸ்தானின் தொடர்ச்சியான வற்புறுத்தலின் பேரில், உலக வங்கி சமீபத்தில் நடுநிலை நிபுணர் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகிய இரண்டின் மீதும் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். மேலும் அத்தகைய ஒப்பந்த விதிகளை மீறினால், மாற்றியமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது". 2016 ஆம் ஆண்டில், உலக வங்கி இரண்டு இணையான செயல்முறைகளை பின்பற்றுவதற்கு "தற்காலிக தடை" விதித்தது. மேலும், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு இணக்கமான வழியைத் தேடுமாறு கோரியது.

பரஸ்பரம் இணக்கமான வழியைக் கண்டறிய இந்தியா பலமுறை முயற்சித்த போதிலும், 2017 முதல் 2022 வரையிலான நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் ஐந்து கூட்டங்களின் போது இந்தப் பிரச்சினையை விவாதிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. கடைசியாக சிந்து நதி நீர் பேச்சுவார்த்தை டெல்லியில் இந்தியாவின் சிந்து நதி நீர் ஆணையர் ஏ.கே.பால் மற்றும் பாகிஸ்தான் தரப்பு ஆணையர் மெஹர் அலி ஷா இடையே நடந்தது. சிந்து நதி நீர் ஆணையத்தின் அடுத்த கூட்டம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News