வைஷ்ணோ தேவி கோயில்: நாளை முதல் ஆன்லைன் புக்கிங், ஹெலிகாப்டர் புக்கிங் துவக்கம்!!

கத்ராவுக்கு அருகிலுள்ள மாதா வைஷ்ணோ தேவி சன்னதிக்கான யாத்திரை ஆகஸ்ட் 16 முதல் வாரத்தில் 2,000 யாத்ரீகர்கள் மட்டுமே என்ற வரம்புடன் தொடங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2020, 10:27 AM IST
  • யாத்திரையின் ஆன்லைன் பதிவு மற்றும் ஹெலிகாப்டர் முன்பதிவு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.
  • யாத்ரீகர்களின் கொரோனா வைரஸ் முடிவு எதிர்மறையாக வந்தால் மட்டுமே கத்ராவைத் தாண்டி செல்ல அனுமதிக்கப்படும்.
  • 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயணிக்க முடியாது.
வைஷ்ணோ தேவி கோயில்: நாளை முதல் ஆன்லைன் புக்கிங், ஹெலிகாப்டர் புக்கிங் துவக்கம்!! title=

வைஷ்ணோ தேவி யாத்திரையின் (Vaishno Devi Yatra) ஆன்லைன் பதிவு மற்றும் ஹெலிகாப்டர் முன்பதிவு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்   என்று ஜம்மு-காஷ்மீர் (Jammu Kashmir) மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் குமார் ஜாங்கிட் தெரிவித்தார்.

கத்ராவுக்கு (Katra) அருகிலுள்ள மாதா வைஷ்ணோ தேவி சன்னதிக்கான யாத்திரை ஆகஸ்ட் 16 முதல் வாரத்தில் 2,000 யாத்ரீகர்கள் மட்டுமே என்ற வரம்புடன் தொடங்கியது. 2,000 யாத்ரீகர்களில் 1900 பேர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்களும் 100 பேர் யூனியன் பிரதேசத்திற்கு வெளியிருந்து வந்தவர்களுமாக இருந்தார்கள். மார்ச் 18 அன்று கொரோனா வைரஸ் COVID-19 தொற்றுநோய் காரணமாக சன்னதிக்கான யாத்திரை நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

ஜம்மு-காஷ்மீர் அரசு ஆகஸ்ட் 11 ம் தேதி, யூனியன் பிரதேசத்தில் உள்ள மத இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க முடிவு செய்து, யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு பல வழிகாட்டுதல்களை வெளியிட்டது. கொரோனா வைரஸ் (Corona Virus) காரணமாக இடைநிறுத்தப்பட்ட கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடங்குகிறது. யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு அரசாங்கம் பல வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.

ALSO READ: வைஷ்ணோ தேவி கோயிலின் பயணத்தை நடத்தும் IRCTC; பக்தர்களுக்காக Wow Package

ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயணிக்க முடியாது. அனைத்து யாத்ரீகர்களும் முகக்கவசம் அணிய வேண்டியிருக்கும். இரவில் பயணம் இருக்காது. தற்போதைக்கு, மாதா பவனில் பக்தர்கள் தங்குவதற்கு தடை உள்ளது. மேலும், பக்தர்கள் காலையில் நடைபெறும் 'ஆர்த்தியில்' கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தற்போதைக்கு கவுண்டர்களில் நபர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக, யாத்ரீகர்களின் பதிவு ஆன்லைன் முறையில் மட்டுமே செய்யப்படுகிறது.  ஜம்மு-காஷ்மீருக்கு வெளியில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு, 100% கட்டாய COVID-19 ஆன்டிஜென் பரிசோதனையின் நெறிமுறை பின்பற்றப்படும்.

இந்த யாத்ரீகர்களின் கொரோனா வைரஸ் முடிவு எதிர்மறையாக வந்தால் மட்டுமே யாத்திரையில் கத்ராவைத் தாண்டி செல்ல அனுமதி வழங்கப்படும். ஜம்மு காஷ்மீரின் சிவப்பு மண்டலங்களைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கட்டாயமாக சோதனை செய்யப்பட்டு, விளைவு எதிர்மறையாக இருந்தால் மட்டுமே யாத்திரையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேவையான நிர்வாக ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஆலய வாரியத்தால் செய்யப்படும்.

ALSO READ: 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது வைஷ்ணோ தேவி கோயில்

Trending News