கர்நாடகாவில் 7 இடை தர்கர்களை அமலாக்கப் பிரிவு கைது செய்து உள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 93 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ய ப்பட்டது.
கர்நாடகாவில் ரூபாய் நோட்டுகள் சம்பந்தமாக சட்ட விரோதமாக சில பேர் ஈடுபடுவதாக அமலாக்கப் பிரிவு தகவல் கிடைத்தது. உடனே அதிரடி சோதனையில் ஈடுபட்ட அமலாக்கப் பிரிவு ரூ. 93 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அமலாக்கப் பிரிவின் இந்த அதிரடி சோதனையின் போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவி செய்த 7 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடகாவில் சமீபத்தில் வருமான வரித்துறையின் நடத்திய வேட்டையில் தொழில் அதிபர் வீட்டின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.5.7 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இப்போதைய நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு அரசு எஞ்ஜினியர் மற்றும் பிறரது மீது சிபிஐ பதிவு செய்த எப்ஐஆர் படி பண மோசடி வழக்கை பதிவு செய்து உள்ளது.
பண முதலைகள் கைது செய்யப்பட்டு உள்ள இடை தரகர்களிடம் குறிப்பிட்ட கமிஷனை கொடுத்து பணத்தை மாற்றி உள்ளனர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.