பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள் குறித்து Kerala Congress Chief- ன் அதிர்ச்சியுட்டும் கருத்து!!

கேரள காங்கிரஸ் தலைவர், சுயமரியாதை கொண்ட ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வார் அல்லது அது மீண்டும் நடப்பதை எப்படியாவது தடுப்பார் என்று குறிப்பிட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2020, 08:47 AM IST
  • கேரளாவில் பெண்கள் குறித்த இழிவான கருத்துக்களை வெளியிட்டார் ஒரு காங்கிரஸ் தலைவர்.
  • அவரது பேச்சிற்குப் பிறகு கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
  • தனது பேச்சுக்கு தலைவர் மன்னிப்பு.
பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள் குறித்து Kerala Congress Chief- ன் அதிர்ச்சியுட்டும் கருத்து!! title=

புதுடெல்லி: மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் யோசித்துப் பேச வேண்டும். பொது இடங்களில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல எதிர்வினைகள் எழக்கூடும். இப்படி இருக்கும் நிலையில், யாரும் எண்ணிக்கூட பார்க்க முடியாத சில தேவையற்ற கருத்துக்களை கேரளாவில் ஒரு அரசியல்வாதி பொது இடத்தில் பேசியுள்ளார்.

கேரள அரசு (Kerala Government) தங்களை தாக்க ஒழுக்கமற்ற ஒரு பெண்ணை நம்புவதாக கேரள பிரதேச காங்கிரஸ் (Congress) கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

“அவரைப் போன்ற ஒரு பெண்ணை யாரும் நம்ப முடியாது. எங்களை குறிவைக்க ஒரு ஒழுக்கமற்ற பெண்ணின் உதவியைப் பெற நீங்கள் நினைத்தால், மாநில மக்கள் அதை நம்ப மாட்டார்கள்” என்று அவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குறிவைத்துப் பேசினார்.

தனது சர்ச்சைக்குரிய பேச்சுகளைத் தொடர்ந்த கேரள காங்கிரஸ் தலைவர், சுயமரியாதை கொண்ட ஒரு பெண் பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்யப்பட்டால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வார் அல்லது அது மீண்டும் நடப்பதை எப்படியாவது தடுப்பார் என்று குறிப்பிட்டார்.

ALSO READ: Kerala gold smuggling case: தான்சானியாவில் இருந்து கேரளா வரை நீளும் தங்கக் கடத்தல் பாதை…

“இது ஒரு முறை நடந்தது என்று யாராவது சொன்னால், அது புரிகிறது. ஆனால் எல்லோரும் தன்னை கற்பழித்ததாக அவர் கூறுகிறார். சுய மரியாதை கொண்ட ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வார் அல்லது அது மீண்டும் நிகழாமல் தடுக்க முயற்சிப்பார்” என்று அவர் கூறினார்.

அவரது இந்த பேச்சால் கடும் எதிர்ப்பு கிளம்பவே, அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, தனது அறிக்கையை சிலர் தவறாக பிரச்சாரம் செய்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

“எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால், நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். இதை பெண்கள் விரோதமாக சித்தரிக்க சில பகுதிகளால் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அது உண்மையல்ல” என்று முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறினார்.

கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா பெண்கள் தொடர்பால காங்கிரஸ் தலைவர் பேசிய பேச்சை வன்மையாக கண்டித்துள்ளார். "கற்பழிப்பு என்பது மனித சமுதாயத்தில் மிக மோசமான மற்றும் கொடூரமான குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களுக்கு இரையாகிவிடுவது பெண்ணின் தவறு அல்ல. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இதுபோன்ற தவறான கருத்துக்களை வெளியிட்டிருக்கக்கூடாது. இத்தகைய கருத்துக்கள் பரவலாக கண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

யுடிஎஃப் தலைவர்களுக்கு எதிராக சூரிய சக்தி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா எஸ் நாயர் தாக்கல் செய்த பாலியல் வன்கொடுமை புகார்களை குற்றப் பிரிவுக்கு மாற்றுமாறு கேரள காவல்துறையினர் வற்புறுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவரின் இந்த கருத்துகள் வெளிவந்துள்ளன.

ALSO READ: கேரளா தங்கக் கடத்தல் வழக்கு: IAS அதிகாரி M Sivasankar கைது!!

Trending News