டெல்லி JNU பல்கலை கழக மாணவர் தேர்தலில் அனைத்து பதவிகளையும் இடதுசாரி அமைப்புகள் வென்றுள்ளது!
டெல்லி JNU பல்கலைகழக மாணவர் தேர்தலானது, டெல்லி மாநில தேர்தலுக்கு நிகராக பார்க்கப்படும் ஒன்றாகும். ஏனெனில் பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை இந்த டெல்லி JNU பல்கலைகழக மாணவர் தேர்தலுக்கு உண்டு.
இந்நிலையில் டெல்லி JNU பல்கலைகழகத்தில் கடந்த செப்டம்பர் 14-ஆம் நாள் 'தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், மற்றும் பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள்' பதவிகளுக்கான மாணவர் தேர்தல் நடைப்பெற்றது.
இந்த தேர்தலில் பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பு (Birsa Ambedkar Phule Students Association - BAPSA), காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (National Students Union of India - NSUI), RSS-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (Akhila Bharatiya Vidyarthi Parsishad - ABVP), அனைத்திந்திய மாணவர் சங்கம் (All Indian Students Association – AISA), இந்திய மாணவர் சங்கம் (Students Federation of India - SFI), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (Democratic Students Federation - DSF), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (All India Students Federation ), இடதுசாரிகளின் ஒருங்கிணைந்த கூட்டணி [AISA - DSF - SFI - AISF] உள்ளிட்ட அமைப்புகள் களம் கண்டன.
இத்தேர்தலின் முடிவுகள் வரும் பொதுத்தேர்தலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இத்தேர்திலின் முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகளின்படி அனைத்து பதவிகளையும் இடதுசாரி அமைப்புகள் வென்றுள்ளது.
#JNUSUFinalResult:
Left Unity swiped all posts. Abvp wiped out!
President: N Sai Balaji
Vice President: Sarika Chaudhry
Gen Secy: Aejaz Ahmad Rather
Joint Secy: Amutha Jayadeep#FightBackJNU #JNUSUElection2018 pic.twitter.com/JmqPkQv1j5
— Waqar Khan (@WAKhan339) September 16, 2018
அதன்படி தற்போது மாணவர் தலைவராக சாய் பாலாஜி, 2617 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2692 வாக்குகள் பெற்று இடதுசாரி அமைப்பின் சரிகா துணை தலைவர் பதவியை வென்றுள்ளார். அதோப்போல் பொதுச்செயலாளர் பதவியினை 2423 வாக்குகளுடன் ஏஜாய்-யும், துணைப் பொதுச்செயலாளர் பதவியினை 1839 வாக்குகளுடன் அமுதா-வும் வென்றுள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக அரசின் தலையீடு அதிகமாக உள்ளது என இடதுசாரி அமைப்புகள் குற்றச்சாட்டுகள் வைத்து வந்த நிலையில் தற்போது அனைத்து பதவிகளையும் இடதுசாரி வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இடதுசாரிகள் பாஜகத-வை வென்றுள்ளது என வளாகத்திற்குள் கருத்துகள் பரவி வருகின்றன.