Lok Sabha Elections 2024: 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல்களின் 7 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. நாளை தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன. மக்களவைத் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகும் முன், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த தேர்தல் குறித்த சில முக்கியமான அம்சங்களை பற்றி அவர் கூறினார்.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த முக்கிய அம்சங்கள்:
- மக்களவை தேர்தலில் இந்த முறை 64.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
- இதுவரை உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
- இந்தத் தேர்தலில் 31 கோடி பெண்களும் 33 கோடி ஆண்களும் வாக்களித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலை நடத்துவதற்காக சுமார் 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள் மற்றும் 1,692 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராஜீவ் குமார் கூறினார். உலகின் மிகப்பெரிய தேர்தல் செயல்பாட்டில் 68,000 கண்காணிப்புக் குழுக்கள், 1.5 கோடி வாக்காளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையர்களை சமூக ஊடகங்களில் சிலர் 'லாபதா ஜென்டில்மேன்' அதாவது ‘காணாமல் போன ஜெம்டில்மேன்’ என கிண்டல் செய்து மீம் போட்டிருந்தார்கள். இதை மீம்ஸ்களை குறிப்பிட்டு பேசிய CEC ராஜீவ் குமார், ‘நாங்கள் எப்போதும் இங்கேதான் இருந்தோம், எங்கும் மறைந்துபோகவில்லை’ என்று கூறினார்.
ட்ரேக் ரெகார்ட் அப்படியே உள்ளது - ராஜீவ் குமார்
‘திட்டமிடல் மற்றும் தயாரிப்புதான் வெற்றிக்கு முக்கியமான காரணம். இந்தியாவில் தேர்தல்களின் அளவும், மக்கள்தொகையும், நம்பகத்தன்மையும் இதனை ஈடு இணையற்றதாக்குகின்றன. தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி, ECI தனது சாதனையை தொடர்கிறது. இந்திய தேர்தல்கள் உண்மையிலேயே ஒரு அதிசயமான விஷயம். உலகில் எங்கும் இதற்கு ஈடு இணை இல்லை. இந்த தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த ஜனநாயக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.’ என்று ராஜீவ் குமார் கூறினார்.
இந்தியாவில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை G7 இல் உள்ள அனைத்து நாடுகளின் வாக்காளர்களை விட 1.5 மடங்கு அதிகம் என்று ராஜீவ் குமார் தெரிவித்தார். அதே சமயம் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம் என்றும் அவர் கூறினார்.
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பங்களிப்பு நமது இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என கூறிய அவர், இது நமது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும் என்றார். தற்போது வாக்களித்த 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த இந்தியாவை பார்த்துள்ளார்கள், கடந்த 70 ஆண்டுகளில் தங்களது பங்களிப்பை அளித்துள்ளார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ