மும்பை ஆரே பகுதி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, மெட்ரோ கார் ஷெட் திட்டம் இடமாற்றம்

மும்பையின் ஆரே ஒரு காடு என்று அறிவிக்கப்பட்டு, மெட்ரோ கார் ஷெட் திட்டம் மும்பையில் உள்ள கஞ்சூர்மாங்கிற்கு மாற்றப்படுகிறது

Written by - ZEE Bureau | Last Updated : Oct 11, 2020, 08:02 PM IST
  • மும்பையின் ஆரே ஒரு காடு என்று அறிவிக்கப்பட்டு, மெட்ரோ கார் ஷெட் திட்டம் மும்பையில் உள்ள கஞ்சூர்மாங்கிற்கு மாற்றப்படுகிறது
  • முன்னதாக 600 ஏக்கர் ஆரே நிலத்தை வனப்பகுதியாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
  • ஆனால் இப்போது அது 800 ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் குறிப்பிட்டார்.
மும்பை ஆரே பகுதி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, மெட்ரோ கார் ஷெட் திட்டம் இடமாற்றம்

புதுடெல்லி: ஆரே மெட்ரோ கார் ஷெட்  திட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது இந்த திட்டம் மும்பையில் உள்ள கஞ்சூர்மார்க் பகுதியில் மாற்றப்படும் எனவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். ஆரே பகுதியில் கார் ஷெட் திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்படுவதை, ஒரு வருடத்திற்கும்  மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இப்பகுதி தற்போது, வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

முன்னதாக 600 ஏக்கர் ஆரே நிலத்தை வனப்பகுதியாக அரசாங்கம் அறிவித்திருந்தது, ஆனால் இப்போது அது 800 ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் குறிப்பிட்டார்.

“ஆரேயில் உள்ள அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். நகர்ப்புற அமைப்பில் 800 ஏக்கர் காடு இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. மும்பையில் தான் இயற்கை வனப்பகுதி உள்ளது, ”என்றார்.

ALSO READ | பெண் காங்கிரஸ் தொண்டரை தாக்கிய கட்சியினர்.... வாய் திறப்பாரா பிரியங்கா...!!!

மெட்ரோ லைன் 3 திட்டம் மூன்று ஆண்டுகள் தாமதமாகலாம் என்றும், இந்த பாதைக்கான கார் ஷெட் ஆரே காலனியில் இருந்து மாற்றப்பட்டால் அதன் செலவு ரூ .2,000 கோடிக்கு மேல் உயரக்கூடும் என்றும் மும்பை மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகள் அச்சம் தெரிவித்ததாகவும் செய்திகள் வந்தன.

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், மெட்ரோ 3 கார் கொட்டகையை ஆரேயிலிருந்து இடமாற்றம் செய்ய மாநில அரசுகள் திட்டமிட்டிருப்பது தவறான கொள்கையின் பிரதிபலிப்பாகும் என்று சமீபத்தில் கூறினார்.

ALSO READ | வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் இனி எங்கிருந்தும் ட்ரைவிங் லைசன்ஸை புதுப்பிக்கலாம்..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

More Stories

Trending News