கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Last Updated : Feb 5, 2019, 11:13 AM IST
கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு!! title=

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, பின்னர் விடுவித்தனர்.

இதையடுத்து கமிஷனர் வீட்டுக்கு விரைந்த மம்தா பானர்ஜி, அங்கு மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளார், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்திருக்க முடியும் எங்களால் என்று கூறினார்.

பின்னர், அவர் மெட்ரோ சேனல் அருகே மம்தா பானர்ஜி நேற்று முன் தினம் முதல் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க ராஜீவ் குமாருக்கு உத்தரவிட கோரியும், சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கொல்கத்தா போலீஸார் சிறை வைத்தது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அவசர வழக்காக விசாரணை நடத்த கோரிய சிபிஐயின் கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள் இன்று விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளதை அடுத்து அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொல்கத்தா கமிஷனர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சிபிஐ அதிகாரிகள் 15 பேரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தது தொடர்பான வழக்கை வரும் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Trending News