ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள் : செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்தது காரணமா?

ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் குறைந்த மதிப்பெண் அளித்ததற்காக கணித ஆசிரியரை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Aug 31, 2022, 05:27 PM IST
  • ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்
  • குறைந்த மதிப்பெண் பெற்ற 11 மாணவர்கள்
  • செய்முறைத் தேர்வில் மதிப்பெண் குறைக்கப்பட்டதா?
ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள் : செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்தது காரணமா?  title=

ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் கோபி கந்தர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வில், 11 மாணவர்கள் "DD" க்ரேடு பெற்றுள்ளனர். இது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்ததைக் குறிப்பதாகும். இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் கணித ஆசிரியரையும், பள்ளி எழுத்தரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

நடைமுறைத் தேர்வில் ஆசிரியர் குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதாகவும், அதற்காக தேர்வில் தோல்வியடைந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஜார்க்கண்ட் கல்வி கவுன்சிலின் தளத்தில் மதிப்பெண்களை ஆன்லைனில்  பதிவேற்றியதற்காக எழுத்தர் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மாணவர்கள் எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்தார்களா அல்லது செய்முறைத் தேர்வில் தோல்வியடைந்தார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ஆசிரியர் தான் மதிப்பெண்களைக் குறைத்ததாக வந்த வதந்தியின் பேரில்தான் மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கொடுக்காததால், இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் 2 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர் முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். பின்னர் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.  அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

மேலும் படிக்க | சிறுநீரை நாக்கால் சுத்தம் செய்... பழங்குடியின பெண்ணை கொடுமை செய்த பாஜக மூத்த தலைவர்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News