திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை - உச்சநீதிமன்றம்!

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது!

Last Updated : Jan 9, 2018, 01:32 PM IST
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை - உச்சநீதிமன்றம்! title=

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது!

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் உச்சநீதிமன்றம் மாற்றம் கொண்டுள்ளது. 

அதன்படி திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்பதில்லை, திரையரங்குகள் வேண்டுமெனில் தாங்கள் இசைத்துக்கொள்ள தடையில்லை என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்தது.

அந்த மனுவில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம், திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை என அறிவித்துள்ளது.

 

Trending News