ட்ரெண்ட் ஆக்குங்க ஆனா ஒழுங்கான ஸ்பெல்லிங் எழுதுங்க - பாஜகவினரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

#BycottQatarAirways என்று பாஜகவினர் ட்ரெண்டாக்கிய ஹேஷ் டேக்கை நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 6, 2022, 06:18 PM IST
  • #BycottQatarAirways என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்டாக்கினர்
  • பாஜகவினரை கலாய்த்த நெட்டிசன்கள்
 ட்ரெண்ட் ஆக்குங்க ஆனா ஒழுங்கான ஸ்பெல்லிங் எழுதுங்க - பாஜகவினரை கலாய்க்கும் நெட்டிசன்கள் title=

தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறான  கருத்தை கூறினார். இந்தக் கருத்து இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களை புண்படுத்தியிருக்கிறது.

மேலும் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் ஒரு நாட்டை ஆளும் கட்சியில் இருப்பவர் இப்படி மதரீதியாக பேசக்கூடாது என தெரிவித்துவருகின்றனர்.குறிப்பாக இந்தியா இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென கத்தார் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஓமன் நாட்டு அரசர் அரபு நாடுகளில் இருக்கக் கூடிய இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் இந்தப் பேச்சுஎன குறிப்பிட்டிருக்கிறார்.

Bharat

நிலைமை கைமீறி போவதை உணர்ந்த பாஜக மேலிடம் நுபுர் ஷர்மாவை இடை நீக்கம் செய்து, பாஜக கட்சி அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என நேற்று அறிக்கை வெளியிட்டது. 

இதற்கிடையே பாஜகவினர் இதுபோல் தொடர்ந்து மற்ற மதத்தவரை புண்படுத்திக்கொண்டிருந்தால் மற்ற மதங்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் இருக்கும் இந்துக்கள் எப்படி நிம்மதியாக இருப்பார்கள்.

பாஜகவினருக்கு உண்மையில் இந்துக்கள் மீது அக்கறை இருந்தால் இப்படி யாரும் பேசமாட்டார்கள் என பலர் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொன்ன கத்தாருக்கு எதிராக பாஜகவினர் குரல் எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

Boycott

அதுமட்டுமின்றி கத்தார் ஏர்வேஸை புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி #bycottQatarAirways என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர்.

ஆனால் இந்த ஹேஷ்டேக்கை பலரும் கலாய்க்க தொடங்கிவிட்டனர். அதாவது #Boycott என்று எழுதுவதற்கு பதிலாக #Bycott என்று பாஜகவினர் எழுதி அதை ட்ரெண்டாக்கியதால் அவர்களது ஹேஷ்டேக் ட்ரோல் மெட்டீரியலாக மாறிவிட்டது.

எழுத்துப் பிழையுடன் கூடிய இந்த ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் ஒரு விஷயம் நிகழ்ந்தால் அதை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்குவது வழக்கமானதுதான்.

BJp

ஆனால் பாஜகவினருக்கு ஒழுங்காக ஸ்பெல்லிங்கூடவா தெரியாது என கேள்வி எழுப்பி, நல்ல வேளை இதை உலகளவில் ட்ரெண்டாக்கவில்லை. அப்படி ஆக்கியிருந்தால் ஸ்பெல்லிங்கூடவா தெரியாது என மற்ற நாட்டினரும் கலாய்த்திருப்பர் என கருத்து தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ”பாரத மாதா தூக்கில் தொங்க வேண்டும்” - பம்முகிறதா பா.ஜ.க?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News