புதிய ஐ.ஆர்.சி.டி.சி. கனெக்ட் ஆப் அறிமுகம்

ஐ.ஆர்.சி.டி.சி.யின் புதிய ஆப்பை நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jan 11, 2017, 10:16 AM IST
புதிய ஐ.ஆர்.சி.டி.சி. கனெக்ட் ஆப் அறிமுகம் title=

புதுடெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி.யின் புதிய ஆப்பை நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மொபைல் போனில் ஐ.ஆர்.சி.டி.சி., ஆப் டவுன்லோட் செய்து டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். பழைய ஐ.ஆர்.சி.டி.சி., ஆப்பை பதிலாக இந்த புதிய ஆப் செயல் படும். மேலும் இந்த புதிய ஆப்பில் ஆன்-லைன் கட்டணம் அதாவது நெட் பாங்கிங், கிரெடிட்கார்ட், டெபிட் கார்ட், பெடிஎம், பெயு, மொபிக்விக் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் டிக்கெட் கட்டணம் கட்டலாம். 

 

 

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மூலம் ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது.

ரயில்வே இணையதளத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவதால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு ‛ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட் என்ற பெயரில் புதிய ஆப் வடிவமைக்கப்பட்டது. இதில், பழைய ஆப்பை காட்டிலும் வேகமாகவும் எளிமையாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த ஆப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட், பெண்கள் கோட்டா, பிரீமியம் தட்கல் கோட்டா மற்றும் சாதாரண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம்.

Trending News