அணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் சீனா, பாக்., முதலிடம்...

உலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திவிட்ட நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணுகுண்டுகளை தியாரிப்பதில் முதலிடம் வகித்து வருகிறது!

Last Updated : Jun 17, 2019, 05:01 PM IST
அணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் சீனா, பாக்., முதலிடம்... title=

உலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திவிட்ட நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணுகுண்டுகளை தியாரிப்பதில் முதலிடம் வகித்து வருகிறது!

சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் இயங்கி வருகிறது. உலகளாவிய அளவில் அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான கையேடுகளை இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது நடப்பு ஆண்டிற்கா கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விபரங்களின்படி சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்ட வகையில் இந்தியாவின் அணுகுண்டுகள் கையிருப்பு கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்த 130-140 என்ற அதே அளவில்தான் இப்போதும் உள்ளது.

ஆனால், பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுகுண்டுகளை தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன என தெரிகிறது.

அதேவேளையில், கடந்த ஆண்டு 280 அணுகுண்டுகளை வைத்திருந்த சீனா இந்த ஆண்டில் 290 அணுகுண்டுகளை வைத்துள்ளது. கடந்த ஆண்டு 140-150 அணுகுண்டுகளை வைத்திருந்த பாகிஸ்தானின் கையிருப்பும் 160-ஐ எட்டியுள்ளது.

இஸ்ரேலிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை 80-ல் இருந்து 90 ஆகவும், கடந்த ஆண்டு 10-20 அணுகுண்டுகளை மட்டுமே வைத்திருந்த வடகொரியாவின் கையிருப்பு தற்போது 30 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Source: SIPRI Yearbook 2019 * ‘Deployed warheads’ refers to warheads placed on missiles or located on bases with operational forces. ** ‘Other warheads’ refers to stored or reserve warheads and retired warheads awaiting dismantlement.
Country Deployed warheads* Other warheads** Total 2019 Total 2018
USA 1 750 4 435 6 185 6 450
Russia 1 600 4 900 6 500 6 850
UK 120 80 200 215
France 280 20 300 300
China   290 290 280
India   130–140 130–140 130–140
Pakistan   150–160 150–160 140–150
Israel   80-90 80–90 80
North Korea .. .. (20–30) (10–20)
Total 3 750 10 115 13 865 14 465

 

கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகள் ஒட்டுமொத்தமாக 14,465 அணுகுண்டுகளை வைத்திருந்தன.

ஆனால், தற்போது அந்த எண்ணிக்கையில் 600 குறைந்து, மேற்கண்ட நாடுகள் வைத்திருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கை 13,865 ஆக உள்ளது. இவற்றில் 3,750 அணு ஆயுதங்கள் படைகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் சுமார் 2 ஆயிரம் அணு ஆயுதங்கள் எப்போதும் இயங்கும் நிலையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என  சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்ட கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News