டெல்லியில் 400 பெட்ரோல் பங்குகள் ஏன் மூடப்பட்டுள்ளன...?

டெல்லியில் இன்று ஒருநாள் 400 பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2018, 11:21 AM IST
டெல்லியில் 400 பெட்ரோல் பங்குகள் ஏன் மூடப்பட்டுள்ளன...? title=

பெட்ரோல், டீசல் விலையை வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தி டெல்லியில் இன்று ஒருநாள் பெட்ரோல் பங்குகள் அடைப்பு....

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சமாளிக்க டெல்லி அரசுக்கு வாட் வரியைக் குறைக்க வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு அம்மாநில அரசு மறுத்து விட்டது.  

இந்நிலையில், இதனை எதிர்த்து டெல்லியில் உள்ள 400 பெட்ரோல் பங்குகள் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 5 மணி வரை செயல்படாது என்று தில்லி பெட்ரோல் விநியோகிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

இது குறித்து அந்த சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 2.50 காசுகள் குறைத்தது. 

இது ஹரியான, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களின் மாநில வரியைக் குறைத்து கொண்டது தன் விளைவேயாகும். ஆனால் தில்லி மட்டும் பொட்ரோல் மற்றும் டீசலின் மீதான மாநில வரியை குறைக்காததால், அண்டை மாநிலங்களை விட இங்கு எரிபொருட்களின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.

இதனால் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 5 மணி வரை 400 பெட்ரோல் பங்குகள் அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது' என டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால், டெல்லியில் இன்று காலை முதல் மக்கள் வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக திண்டாடி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தி நடைபெறும் வேலைநிறுத்தம் காரணமாக, டெல்லியில் கால் டாக்ஸி, ஆட்டோ சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

Trending News