Petrol diesel price today May 25 2021: சென்னையில் இன்று பெட்ரோல் விலை என்ன?

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 25, 2021, 09:44 AM IST
Petrol diesel price today May 25 2021: சென்னையில் இன்று பெட்ரோல் விலை என்ன? title=

Petrol Diesel Rate Today: மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை  பழக்கத்தில் இருந்தது. 

ஆனால், தற்போது, பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி நிர்ணயிக்கப்படுகின்றன. சர்வதேச நிலையில், கச்சா எண்ணெய் விற்கப்படும் விலைக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல்  (Petrol, Diesel Price) விலைகள் தினமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 94.86 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 88.87 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 95.06 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 89.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று வீழ்ச்சியை கண்டாலும், மே மாதம் 4 ஆம் தேதியில் இருந்து எரிபொருள் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் மாறுகின்றன, அந்நிய செலாவணி விகிதங்களுடன் சர்வதேச சந்தையில் கச்சா விலையைப் பொறுத்து விற்பனை விலையில் மாறுதல்கள் செய்யப்படுகின்றன.

ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

பெட்ரோல்-டீசல் விலையை எவ்வாறு சரிபார்க்கலாம் (How to check petrol-diesel price)

SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை நீங்கள் அறியலாம். பெட்ரோல் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் மாறுபடும்.

ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து இதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCL வாடிக்கையாளர், HP Price - என 9222201122 செய்தியை அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News