பிரேசில், இந்தோனேசியா அதிபர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை!

ஜி 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பிரேசில் இந்தோனேசியா அதிபர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்!!

Last Updated : Jun 29, 2019, 08:03 AM IST
பிரேசில், இந்தோனேசியா அதிபர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை! title=

ஜி 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பிரேசில் இந்தோனேசியா அதிபர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்!!

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்றுவரும் G20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி ஜி 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பிரேசில் இந்தோனேசியா அதிபர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இன்று காலை 9 மணிக்கு இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடாடோவையும், காலை 9.20 மணிக்கு பிரேசில் அதிபர் ஜேர் பொல்சோனரோவையும் சந்திக்கிறார்.

இதையடுத்து, காலை 9.40 மணிக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் 10 மணிக்கு ஏற்றத்தாழ்வுகள் அடங்கிய நிலையான உலகம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இதை தொடர்ந்து 11.15 மணிக்கு இத்தாலி பிரதமர் கியூசெப்பி கான்டேவை சந்திக்கிறார்.

பின்னர், 11.35 மணிக்கு துருக்கி அதிபர் தய்யீப் எர்டோகனுடன் சந்திப்பு. முற்பகல் 11.55 மணிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் மற்றும் சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா ஆகியோருடன் சந்திக்கிறார். நண்பகல் 12.15 மணிக்கு மதிய உணவுடன்பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் குறித்து ஆலோசனை. இதையடுத்து நண்பகல் 1.15 மணிக்கு ஆலோசனை நிறைவு.

பின்னர் 2.35 மணிக்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனுடன் சந்திப்பு. மாலை 4 மணிக்கு டெல்லிக்கு திரும்பிகிறார். 

 

Trending News