ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் பிரதமர் மோடி ஐரோப்பா பயணம்

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி மே 2ம் தேதி பெர்லின் சென்றடைகிறார். இதற்குப் பிறகு, அவர் மே 3-4 தேதிகளில் கோபன்ஹேகனுக்குச் செல்கிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2022, 03:20 PM IST
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் பிரதமர் மோடி ஐரோப்பா பயணம் title=

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் முதலாவது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மே மாதம் தொடங்குகிறார். மே 2ம் தேதி முதல் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.

ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு தனது சுற்று பயணம் தொடர்பாக குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பிராந்தியம் பல சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் ஐரோப்பிய பயணம்  மேற்கொள்ள இருப்பதாக கூறினார். ஐரோப்பிய கூட்டாளிகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு வலுப்படுத்த விரும்புவதாக  பிரதமர் மேலும் கூறினார்.

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் மே 2 ஆம் தேதி பெர்லினுக்குச் செல்வதாக பிரதமர் மோடி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்கலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஓலாஃப் ஸ்கோல்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்றார். ஸ்கோல்ஸ் அதிபராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர் மே 3-4 தேதிகளில் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சனின் அழைப்பின் பேரில் கோபன்ஹேகனுக்கு செல்வார். அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்த டென்மார்க் பயணத்தின் போது  நடைபெற உள்ள 2ஆவது இந்தியா-நர்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார்.

மேலும் படிக்க | Indo-Pak Relation: தாஷ்கண்டில் பிரதமர் மோடி - ஷாபாஸ் ஷெரீப் சந்திப்பு நடைபெறுமா...
 

 

இந்த பயணத்தின் போது, ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் ஒரு நாள் தங்கும் பிரதமர், இரு இரவுகளை விமான பயணத்தில் கழிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா திரும்பும் போது, ​​பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சிறிது நேரம் செலவிட்டு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளேன் என்று பிரதமர் மோடி கூறினார். எனது பயணத்தின் மூலம்,  அமைதி மற்றும் வளத்திற்காக இந்தியாவின் முக்கிய பங்காளிகளான ஐரோப்பிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகிறேன் என அவர் கூறினார்

உக்ரைன் ஆக்கிரமிப்பினால் ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பாவின் பல நாடுகள்  ஒன்றுபட்டிருக்கும் இந்த தருணத்தில் பிரதமரின் இந்த பயணம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News