டெல்லி: இந்தியா முழுவதும் உள்ள 12 கோடி விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் துவங்கி வைக்கிறார்.
பிரதமரின் கிஸ்ஸான் சம்மான் நிதி என்ற திட்டத்தை இன்று கோரக்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய விவசாய நலன் திட்டம் அமலுக்கு வர உள்ளது. சுமார் 12 கோடி சிறு, குறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பிரதமர் மோடி மாற்றம் செய்ய உள்ளார்.
இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக ஒவ்வொரு விவசாயியின் வங்கி கணக்கிலும் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது. இதன்படி ஆண்டுக்கு 3 தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை மிஞ்சும் வகையில் இத்திட்டத்தை பிரதமர் மோடி அரசு செயல்படுத்த உள்ளது.
இந்த ரூபாய் 75,000 கோடி ஒதுக்கீடு செய்த யூனியன் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட விவசாயி முதலீட்டு ஆதரவு திட்டத்தின் கீழ் மிகப்பெரிய நேரடி பணமாக மாறும். இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.