இன்று குஜராத் வருகை புரியும் இஸ்ரேலின் பிரதமர் திரு பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் திருமதி சாரா நெத்தன்யாகு ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கின்றார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்று பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கின்றனர். சபர்மதி ஆசிரமத்தில் அவர்கள் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
பின்னர் அகமதாபாத்தில் உள்ள தியோ டோலேரா கிராமத்திலுள்ள "iCreate மையத்தை" பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு திறந்துவைக்கின்றனர்.
அங்கிருந்து பின்னர், இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு மற்றும் பிரதமர் மோடி பனஸ்கந்த மாவட்டத்தில் வதோதாவில் காய்கறிகளுக்கான சிறப்பு மையத்தை பார்வையிட உள்ளனர்.
இந்த பயணத்திம்போது இரண்டு பிரதமர்களும் விவசாயிகளுடன் தொடர்புகொண்டு பல்வேறு விஷயங்களை பகிரவுள்ளனர். பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு அங்கிருந்து மும்பைக்கு புறப்படுவார்.
#TopStory PM to receive Israel PM Netanyahu & his wife Sara Netanyahu in Gujarat. Both PMs to inaugurate iCreate Center at Deo Dholera Village in Ahmedabad. They'll also dedicate a mobile water desalination van to Suigam Taluka, of Banaskantha district, via video link pic.twitter.com/V53moTF6tn
— ANI (@ANI) January 17, 2018