உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி தொடரும்: வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு சுப்ரீம்கோர்ட் அதிரடி

வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் வரும் 29-ந் தேதி ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர்.

Last Updated : May 11, 2016, 11:58 AM IST
உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி தொடரும்: வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு சுப்ரீம்கோர்ட் அதிரடி

உச்சநீதிமன்றம்: வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் வரும் 29-ந் தேதி ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர்.

இவர்கள் 9 பேரும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து சட்டசபையில் கடந்த மாதம் அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். எனினும் நிதி மசோதா சட்டசபையில் நிறைவேறியதாக சபாநாயகர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.அத்துடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டப்படி நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார். 9 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டதால் சட்டசபையில் பெரும்பான்மையை மார்ச் 28–ந்தேதிகுள் நிரூபிக்கும்படி மாநில கவர்னர் கே.கே.பால் உத்தரவிட்டார்.

ஹரிஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏ.க்களுடன் பணப் பேரம் பேசுவதாக குற்றச்சாட்டப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்பாகவே மார்ச் 27-ந்தேதி அம்மாநிலத்தில் திடீரென ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து ஹிரிஷ் ராவத் சார்பில் நைனிதால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ததுடன் வருகிற 29–ந்தேதி ஹரிஷ் ராவத் அரசு சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்றும் கூறியது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அப்போது ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 27–ந்தேதி விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள். 

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் ஹரிஷ் ராவத் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அதனை எதிர்த்து 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தபோதே அவர் ஆளும் உரிமையை இழந்துவிட்டதாக வாதிட்டார். இதையடுத்து மத்திய அரசிடம் 7 கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கின் மீது முடிவு எடுக்கும்வரை ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் 29-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். மீண்டும் வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

 

More Stories

Trending News