களம் இறங்கிய பிரியங்கா காந்தி... முதல் முறையாக காங்கிரஸ் கட்சியில் பதவி

ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் ஒரு பதவி வழங்கப்பட்டு உள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 23, 2019, 01:22 PM IST
களம் இறங்கிய பிரியங்கா காந்தி... முதல் முறையாக காங்கிரஸ் கட்சியில் பதவி

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இந்தநிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறது. மற்றொரு புறம் கூட்டணி குறித்து பேச்சு வாரத்தை நடைபெற்று வருகிறது. 

இதனையடுத்து ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் ஒரு பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக ப்ரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பதவி ஏற்றுக்கொள்வார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.