‘உழைக்க தெரிந்த மனமே உனக்கு உறுதி கிடையாதா?’: வியாபார நஷ்டத்தால் மாயமான தொழிலதிபர்!!

வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் தொழில் வீழ்ச்சி ஆகியவற்றால் பல தொழிலதிபர்கள் இப்படிப்பட்ட விபரீதமான முடிவுகளை எடுப்பதை நாம் சமீப காலங்களில் பார்த்து வருகிறோம். 

Last Updated : Oct 23, 2020, 08:36 PM IST
  • ஒரு முன்னணி இரு சக்கர வாகன விற்பனையாளர் நிறுவனத்தின் உரிமையாளர் வெள்ளிக்கிழமை காணாமல் போனார்.
  • தொழிலதிபர் காணாமல் போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரை போலீசார் பதிவு செய்தனர்.
  • இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
‘உழைக்க தெரிந்த மனமே உனக்கு உறுதி கிடையாதா?’: வியாபார நஷ்டத்தால் மாயமான தொழிலதிபர்!! title=

மகாராஷ்டிரா: புனேவில் (Pune) ஒரு முன்னணி இரு சக்கர வாகன விற்பனையாளர் நிறுவனத்தின் உரிமையாளர் வெள்ளிக்கிழமை காணாமல் போனார். பாஷங்கர் ஆட்டோவின் தலைவர் 64 வயதான கௌதம் பஷங்கர், தனது செயலுக்கு யாரும் காரணமில்லை என்ற குறிப்பை விட்டுவிட்டு சென்றிருக்கிறார்.

இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. காணாமல் போன நபர் குறித்து ஒரு புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடும் தீவிர பணியில் போலீஸ் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், அந்த தொழிலதிபர் இருக்கும் இடம் பற்றி இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை.

"பஷங்கர் அக்டோபர் 21 அன்று காணாமல் போனார். அவர் எழுதிவிட்டுச் சென்றுள்ள ஒரு குறிப்பை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம், அதில் அவர் கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் வியாபாரத்தில் அதிக இழப்புக்களை சந்தித்து வருவதாகவும், அவரது சில முடிவுகளால், அவரது குழந்தைகள் தொல்லைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் எழுதியுள்ளார்" என்று சிவாஜிநகர் காவல் நிலையத்தின் ஒரு மூத்த அதிகாரி PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ALSO READ: Ireland-லிருந்து வந்த alert, சென்னையில் பிடிபட்ட திருடன்: Hero-வான Technology!!

"அவர் காணாமல் போனதற்கோ அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டால் அதற்கோ யாரும் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் அவர் தன்னுடைய குறிப்பில் கூறியுள்ளார்” என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

தொழிலதிபர் காணாமல் போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரை போலீசார் பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டம் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் தொழில் வீழ்ச்சி ஆகியவற்றால் பல தொழிலதிபர்கள் இப்படிப்பட்ட விபரீதமான முடிவுகளை எடுப்பதை நாம் சமீப காலங்களில் பார்த்து வருகிறோம். கடினமாக உழைத்து பெரிய அளவில் பணமும் புகழும் சேர்க்கும் இவர்கள் இப்படிப்பட்ட சவால்களைக் கண்டு எப்படி அஞ்சுகிறார்கள், இவற்றிற்கு முன்னால் எப்படி தோல்வியை ஒப்புக்கொண்டு விடுகிறார்கள் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகத்தான் உள்ளது. 

ALSO READ: தவறாக வெளியிடப்பட்ட NEET மதிப்பெண்ணால் பரிதாபமாக மாணவி தற்கொலை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News