பேருக்கு பின்னால் காந்தி என சேர்த்தவர் எல்லாம் காந்தியா?... -பட்னாவிஸ்!

சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதையடுத்து பாஜக போராட்டங்களில் குதித்துள்ளது.

Last Updated : Dec 15, 2019, 12:30 PM IST
  • அந்தமான் சிறைச்சாலையில் 12 ஆண்டுகளாக சாவர்க்கர் சித்திரவதைக்கு ஆளாக நேரிட்டது, ஆனால் ராகுல் காந்தியால் 12 மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.
  • உங்கள் பெயரில் காந்தியை கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் காந்தியாக மாறிவிட முடியாது.
  • சாவர்க்கருக்கு எதிராக இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது, நாட்டுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த அனைத்து தேசபக்தர்களுக்கும் அவமானம் என தெரிவித்துள்ளார்.
பேருக்கு பின்னால் காந்தி என சேர்த்தவர் எல்லாம் காந்தியா?... -பட்னாவிஸ்! title=

சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதையடுத்து பாஜக போராட்டங்களில் குதித்துள்ளது.

அந்த வகையில் தற்போது மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராகுல் காந்தி மீது தனது தாக்குதலை தொடுத்துள்ளார்.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த அறிக்கை முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மகாத்மா காந்தி மட்டுமே காந்தி என்ற கடைசி பெயரைக் கொண்டு காந்தியாக மாறமாட்டார் என்றும், சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்திக்கு தெரியாது என்றும் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

அந்தமான் சிறைச்சாலையில் 12 ஆண்டுகளாக சாவர்க்கர் சித்திரவதைக்கு ஆளாக நேரிட்டது, ஆனால் ராகுல் காந்தியால் 12 மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. உங்கள் பெயரில் காந்தியை கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் காந்தியாக மாறிவிட முடியாது. சாவர்க்கருக்கு எதிராக இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது, நாட்டுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த அனைத்து தேசபக்தர்களுக்கும் அவமானம் என தெரிவித்துள்ளார்.

இது தவிர, மன்னிப்பு கேட்பதைப் பொருத்தவரை, ரபேல் பிரச்சினையிலும் ராகுல் சில கூற்றுக்களைக் கூறினார், பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டார். RSS குறித்த தனது கருத்துக்களுக்காக அவர் நீதிமன்ற வழக்கையும் எதிர்கொள்கிறார். இது அவரது ஆளுமையின் ஒரு பகுதியாகும், குழந்தைத்தனமான அறிக்கைகளை வெளியிட்டு பின்னர் மன்னிப்பு கேட்க மறுப்பது, இறுதியாக மன்னிப்பு கேட்பது என்பது ராகுலின் வழக்கம் என்றும் அவர் காங்கிரஸ் தலைவரை விமர்சித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாரத் பச்சாவ் (இந்தியாவை காப்பாற்றுங்கள்) பேரணியை காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. இந்த பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில் தான் "ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும், மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து தற்போது பாஜக-வின் மத்தியில் போராட்டங்களை வெடிக்க செய்துள்ளது.

Trending News