பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் ராகுல் செய்கிறார்: JP.நட்டா

பாதுகாப்புத்துறைக்கான நடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி ஒரு முறைகூட பங்கேற்கவில்லை என ஜெ.பி. நட்டா விமர்சனம்!!

Last Updated : Jul 6, 2020, 02:00 PM IST
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் ராகுல் செய்கிறார்: JP.நட்டா title=

பாதுகாப்புத்துறைக்கான நடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி ஒரு முறைகூட பங்கேற்கவில்லை என ஜெ.பி. நட்டா விமர்சனம்!!

காங்கிரஸ் தலைவர் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவின் ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை, ஆனால் தொடர்ந்து தேசத்தை "மனச்சோர்வு" செய்வதாகவும், ஆயுதப்படைகளின் வீரம் குறித்து கேள்வி எழுப்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக தலைவர் JP.நட்டா கடுமையாக சாட்டியுள்ளார்.  

இது குறித்து, மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள JP.நட்டா..... "ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் செய்யக்கூடாத அனைத்தையும் ராகுல் காந்தி செய்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "ராகுல் காந்தி இதுவரை பாதுகாப்புத் துறைக்கான நடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ஒரு முறைகூட பங்கேற்றது இல்லை. ஆனால், சொல்லவே வருத்தமாக இருக்கிறது, தொடர்ந்து நமது ராணுவ வீரர்களின் வீரத்தைப் பற்றி கேள்வி எழுப்பி, தேசத்தை மனச்சோர்வுக்கு உள்ளாக்குகிறார். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் இது போன்று செய்யமாட்டார். 

பாஜக தலைவர் மேலும் கூறுகையில், ராகுல்காந்தி புனிதமான அரச பரம்பரையில் இருந்து வந்தவர். நாடாளுமன்ற விவகாரங்களைப் புரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியில் தகுதியான பல உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் அந்த வாரிசுக் குடும்பம் அத்தகைய தலைவர்களை ஒருபோதும் வளரவிட்டது இல்லை. உண்மையாகவே இது வேதனை" என  நட்டா ட்வீட் செய்துள்ளார்.

இந்திய, சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை அதிகரித்துள்ளது. இந்த எல்லைப் பிரச்சனையை மையமாக வைத்து மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. இனிலையில், பா.ஜ.க. தலைவர் நட்டா ஆயுதப்படைகளின் மன உறுதியைக் குறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

READ | கொரோனா தடுப்பு மருந்து குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்ட பகீர் தகவல்..!

நாட்டின் COVID-19 நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று காந்தி மீண்டும் நரேந்திர மோடி அரசாங்கத்தை குறிவைத்ததை அடுத்து நட்டாவின் கருத்துக்கள் வந்துள்ளன. அவர் மேலும் கூறுகையில், பணமதிப்பிழப்பு கொள்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்துவது பாஜக அரசின் பெரும் தோல்விகளாகும். கொரோனா வைரஸ் நிலைமையைக் கையாள்வதில் அரசாங்கத்தின் தோல்வியுடன் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் இந்தக் கொள்கைகள் குறித்து வழக்கு ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.

Trending News