ஹரியானாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் திடீரென தரையிரக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் டெல்லி செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்கிடையில் அவரது ஹெலிகாப்டர் தரையிரக்கப்பட்ட ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களுடன் தானும் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார் காங்கிரஸ் தலைவர்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ராகுலுக்கு பந்து வீச, ராகுல் பேட்டிங் செய்கிறார். இதற்கிடையில் பின்னால் ராகுலை ஊக்குப்படுத்தி சிறுவர்களின் பெரும் சத்தம் கேட்கிறது.
#WATCH Congress leader Rahul Gandhi plays cricket with local boys in Rewari after his chopper made an emergency landing at KLP College earlier today, due to bad weather while returning to Delhi from Mahendragarh after addressing an election rally. #Haryana pic.twitter.com/Y4rv0Gf8Gg
— ANI (@ANI) October 18, 2019
இதனையடுத்து, அந்த சிறுவர்களுடன் ராகுல் உரையாடுகிறார். பின்னர் மோசமான வானிலை காரணமாக ராகுலின் வான்வழிப் பயணத்தை தொடர முடியாது என விமானி தெரிவிக்க, பின்னர் அவர் அங்கிருந்து தரை வழி மார்க்கமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஹரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் வரும் 21 அக்டோபர் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரியானாவின் மஹேந்திரகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சோனியா காந்தியின் பிரச்சார பயணம் திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில்., ராகுலின் பிரச்சாரம் திட்டத்தில் சில மாற்றங்களுடன் நிகழ்ந்தேறியது. பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய, ராகுல் காந்தி, அரசு நடத்தும் நிறுவனங்களை தனியார்மயமாக்குவது கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.