அன்பு, இரக்கம் மட்டுமே தேசத்தை உருவாக்கும் பிரதமருக்கு ராகுல் டுவிட்

தேசத்தை கட்டமைக்க என்ன வழி தெரியுமா? பிரதமருக்கு டுவிட் செய்த ராகுல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 21, 2018, 02:16 PM IST
அன்பு, இரக்கம் மட்டுமே தேசத்தை உருவாக்கும் பிரதமருக்கு ராகுல் டுவிட் title=

மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் மீது பேசிய ராகுல்காந்தி, ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஏற்ப்பட்ட பாதிப்பு, கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி சம்பவம், விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய்யான வாக்குறுதி, ஃபேல் போர் விமான ஒப்பந்தம், அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரம் என மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். பின்னர் நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன் என கூறிய ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கட்டிபிடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

பின்னர் பிரதமர் மோடி அனைத்து குற்றச்சாற்றுக்கும் பதிலளித்து கிட்டத்தட்ட ஒன்றை மணி நேரம் பேசனார்.  இதுக்குறித்து, இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், 

 

 

"இது நேற்று பார்லிமென்டில் விவாதத்தின் போது நடந்த முக்கிய விஷயம்.... 

பிரதமர் மோடி பேசிய போது வெறுப்பு, பயம், கோபம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளார். இதை நமது மக்கள் இதயத்தில் விதைக்கிறார்.

அனைத்து இந்தியர்களின் இதயத்திலும் அன்பு மற்றும் இரக்கம் மட்டுமே உள்ளது என்பதை நிரூபிப்போம். இதன் மூலம் மட்டுமே ஒரே வழி... ஒரு தேசத்தை கட்டமைக்க எனக் கூறியுள்ளார். 

Trending News