500 ரூபாய் நோட்டு லேட்டஸ்ட் அப்டேட்: சில ஆண்டுகளுக்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்பிறகு கரன்சி நோட்டுகள் தொடர்பாக பல்வேறு வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது 500 ரூபாய் நோட்டு பற்றிய பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பொதுவாக அனைவரிடமும் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது சகஜம். அப்படி உங்களிடமும் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
500 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கலாம். இது குறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
சந்தையில் 2 வகையான 500 ரூபாய் நோட்டுகள்
சந்தையில் 2 வகையான ரூ.500 நோட்டுகள் கிடைக்கின்றன. இரண்டு நோட்டுகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை, அதாவது முதல் பார்வையில் இதன் வேறுபாடுகளை அடையாளம் காண்பது கடினம். இந்த இரண்டு வகையான நோட்டுகளில் ஒரு வகையான நோட்டுகள் போலியான நோட்டுகள் என கூறப்படுகின்றன. இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றும் வைரலாக பரவி வருகிறது. எந்த வகையான நோட்டுகள் உண்மையானவை என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்
வீடியோவில் உள்ள விஷயம் என்ன?
ஒரு வகையான நோட்டு போலியானது என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளது. PIB வீடியோவைப் பற்றிய உண்மைச் சரிபார்ப்பையும் செய்துள்ளது. உண்மைச் சோதனைக்குப் பிறகு, அந்த வீடியோவின் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் அல்லது காந்திஜியின் படத்திற்கு மிக அருகாமையில் போகும் பச்சைக் கீற்று உள்ள 500 ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இதுவே இறுதி முடிவு: இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும்
அந்த காணொளியின் உண்மைச் சோதனைக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. சந்தையில் இருக்கும் இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும். உங்களிடம் இவற்றில் எந்த விதமான நோட்டு இருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை. இரண்டு வகையான நோட்டுகளும் சந்தையில் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வைரலாகும் செய்தியின் உண்மையைக் கண்டறியவும்
உங்களுக்கும் அப்படி ஏதாவது செய்தி வந்தால், கவலைப்படவேண்டாம். இது போன்ற போலி செய்திகளை யாரிடமும் பகிர வேண்டாம். இது தவிர, எந்தச் செய்திக்கும் உண்மைச் சரிபார்ப்பும் செய்யலாம். இதற்கு https://factcheck.pib.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைப்புக்கு செல்ல வேண்டும். இது தவிர, +918799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ வீடியோவை அனுப்பி வீடியோவின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | Jackpot! லட்சங்களை அள்ளித் தரும் ‘ஒரு ரூபாய்’ நோட்டு உங்க கிட்டே இருக்கா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ