நிதின் கட்கரியை பிரதமாராக நியமியுங்கள்: விவசாய சங்கத் தலைவர் கடிதம்

மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளதால், பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் கிஷோர் திவாரி ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2018, 05:25 PM IST
நிதின் கட்கரியை பிரதமாராக நியமியுங்கள்: விவசாய சங்கத் தலைவர் கடிதம் title=

நாக்பூர்: மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளதால், பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் கிஷோர் திவாரி ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விவசாய மேம்பாட்டு குழுவான வி.என்.எஸ்.எஸ்.எம் தலைவராக இருப்பவர் கிஷோர் திவாரி. அவர் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

கிஷோர் திவாரி கூறியதாவது, சர்வாதிகார மனப்பான்மையுடன் காணப்படும் தலைவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருப்பது நாட்டிற்கு ஆபத்தானதாகும். இதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளது. பாஜகவின் தலைமை தற்போது ஜனநாயகத்திலிருந்து விலகிவிட்டது. பொது மக்களின் சார்பாக ஆலோசனை வழங்குவதற்கு முயற்சித்தால், அது தடுக்கப்படுகிறது. இது பி.ஜே.பி மீது மக்களுக்கு நிறைய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தாக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் தேர்தல்களில் எதிரொலித்து. 

தற்போது பிஜேபியின் அடிமட்ட தொண்டர்கள் மிக கோபமாக இருப்பதாகவும் கிஷோர் திவாரி தெரிவித்தார். அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் எனவும் கூறினார். வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்றால் பிரதமர் வேட்பாளரை மாற்ற வேண்டியது மிக அவசியம். இதற்கு நித்ன் கட்காரி பொருத்தமானது.

வரும் ஆண்டு 2019-ல் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்

ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரையும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என கிஷோர் திவாரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News