லடாக்கில் அறிவிக்கப்பட்ட சூரிய மின்னுற்பத்தி திட்டம் இடம் மாற்றம்?

ரூபாய் 45,000 கோடி மதிப்பீட்டில் லடாக்கில் அமைக்கப்பட உள்ள சூரிய மின்னுற்பத்தி திட்டம், வனஉயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில், இத்திட்டத்தினை அருகில் வேறொரு இடத்திற்கு மாற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது!

Last Updated : Aug 16, 2019, 12:20 PM IST
லடாக்கில் அறிவிக்கப்பட்ட சூரிய மின்னுற்பத்தி திட்டம் இடம் மாற்றம்? title=

ரூபாய் 45,000 கோடி மதிப்பீட்டில் லடாக்கில் அமைக்கப்பட உள்ள சூரிய மின்னுற்பத்தி திட்டம், வனஉயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில், இத்திட்டத்தினை அருகில் வேறொரு இடத்திற்கு மாற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது!

இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், சூரிய மின்னாற்றல் திட்டங்கள் லடாக் பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டுள்ள புதிய யூனியன் பிரதேசமான லடாக்கில், ரூபாய் 45,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,500 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி திட்டம் அமைய உள்ளது.

லே மாவட்ட தலைநகரில் இருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், நியோமா பகுதியில் உள்ள ஹன்லே-ஹல்டோ Hanle-Khaldo என்ற கிராமத்தில் 5 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
இதேபோல கார்கில் மாவட்ட தலைநகரில் இருந்து 254 கிலோமீட்டர் தொலைவில் சன்ஸ்கர் தாலுகாவில் சுரு பகுதியில் 2,500 மெகாவாட் சூரியமின்னுற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களால், சூரிய மின்தகடுகளை துப்புரவு செய்வது, மின்தடம் மற்றும் மின்மாற்றிகளை பராமரிப்பது போன்ற வேலைகள் உள்ளூர் மக்களுக்கு கிடைத்து, மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் இந்த 7,500 மெகாவாட் மின்சாரத்தை உள்ளூர் மக்கள் தற்போது ஜென்செட்டுகள் மூலமே பெற வேண்டியுள்ளது.

இப்படி ஜென்செட்டுகளை பயன்படுத்துவதால், ஆண்டுக்கு 12,700 டன் அளவுக்கு கார்பன் உமிழ்வு வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைவது, இந்த கார்பன் உமிழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஹன்லே-ஹல்டோ கிராமம் பாதுகாக்கப்பட்ட வனஉயிரினங்களின் இனப்பெருக்க பகுதியில் வருவதால், சூரியமின்னுற்பத்தி நிலையம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளால் வனஉயிரின பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என எதிர்ப்புகள் எழுந்தது.

சூரியமின்னுற்பத்தி நிலையத்திற்கு இடம் கொடுப்பதை முன்னுதாரணமாகக் காட்டி, துப்பாக்கி சுடும் பயிற்சிக்கும் இடம்தருமாறு பாதுகாப்பு படையினர் கேட்பது, வனஉயிரினங்கள் துறையை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 5,000 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை, லே நகரில் இருந்து 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோரி பீடபூமிப் பகுதிக்கு மாற்றுமாறு, இந்திய சூரிய எரிசக்தி கழகத்தை வனஉயிரினங்கள் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள இடம் லே-மணாலி நெடுஞ்சாலை அருகே அமைந்திருப்பது கருவிகள், ஆட்களை கொண்டுசெல்ல வசதி என்றாலும், குளிர்காலத்தில் 6 மாதங்களுக்கு பனிமூடிக் கிடக்கும். 6 முதல் 8 மாதங்களுக்கு சாலைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையில், சூரிய மின்னுற்பத்தி நிலைய பராமரிப்பு கடினமானதாகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News