பழைய நோட்டுகள் வைத்திருந்தால் ரூ.50,000 அபராதம்

டிசம்பர் 30-ம் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Last Updated : Dec 27, 2016, 08:44 AM IST
பழைய நோட்டுகள் வைத்திருந்தால் ரூ.50,000 அபராதம் title=

புதுடெல்லி: டிசம்பர் 30-ம் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி, கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் மற்றும் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது அறிவித்தார். இதனையடுத்து அதனை வைத்திருப்பவர்கள் வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்றிக்கொள்ள டிசம்பர் 30-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளில், 10-க்கு மேலாக வைத்திருப்போருக்கு இந்த அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு தெரிவிக்கின்றன. இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான இறுதி அறிவிப்பு வெளிப்படும் என்று கூறப்படுகிறது.

எனினும், செல்லாத ரூபாய் பணத்தை, 10 நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு, ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும், இதன்மூலமாக பணப்பதுக்கலை தடுக்கவும் தீர்மானித்துள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Trending News