ராஜஸ்தானில் ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 13) ஹரியானாவின் மானேசரில் உள்ள ஒரு ஹோட்டலில் சுமார் 15 எம்.எல்.ஏ.க்கள் ஓய்வெடுக்கும் வீடியோவை வெளியிட்டார்.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்-அமைச்சர் சோக் கெலாட், துணை முதல்-அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் அசோக் கெலாட், சச்சின் பைலட்டை அவமானப்படுத்துவதற்காக இந்த நோட்டீசை அனுப்ப வைத்ததாக சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.
READ | காங்., பைலட்டை சமாதானப்படுத்த சாத்தியமில்லை, ராஜஸ்தானில் கவிழும் காங்., ஆட்சி?
அந்த வகையில் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-அமைச்சருக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது.
இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்-அமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்-அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பஸ்கள் மூலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச்சென்று தங்க வைக்கப்பட்டனர்.
READ | ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: Rahul Gandhi - Sachin Pilot இடையே தொலைபேசி உரையாடல்
இந்த நிலையில சச்சின் பைலட் தனக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது 10 வினாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.