கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்!!

Last Updated : May 17, 2019, 12:32 PM IST
கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! title=

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்!!

பல கோடி ரூபாய் மதிப்புடைய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது. ராஜீவ் குமார் சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய மிகப்பெரிய அதிகார பலம் கொண்ட சிலரை காப்பதற்காக ராஜீவ் குமார் முயற்சிப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ராஜீவ் குமாரை துன்புறுத்துவதற்காகவே சிபிஐ காவலில் எடுக்க அனுமதி கோருவதாக ராஜீவ் குமாரின் வழக்கறிஞர் பலத்த ஆட்சேபம் எழுப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ராஜீவ் குமாருக்கு எதிராக கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும், சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.  இதனிடையே, ராஜீவ் குமாரை கைது செய்ய அனுமதியளிக்குமாறு அண்மையில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க காவல் துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய விதித்த தடை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தவிட்டது. மேலும் 7 நாட்களுக்குள் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்திய உச்சநீதிமன்றம் 7 நாட்களில் உரிய நீதிமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.

 

Trending News