2014-ஆம் ஆண்டு அக்டோபர் துவங்கி 2019 ஆகஸ்ட் வரை மகாராஷ்டிராவில் 14,591 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., 2019-ஆம் ஆண்டில் நாக்பூர் மற்றும் அமராவதி வருவாய் பிரிவுகளின் கீழ் வரும் 11 மாவட்டங்களில் 1,286 விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில சட்டசபையில் காங்கிரஸ் MLA சரத் ரான்பைஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அமைச்சர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்., "அக்டோபர் 2014 முதல் 2019 ஆகஸ்ட் வரை சுமார் 14,591 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இதில் 5,430 வழக்குகள் வேண்டிய உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் நிகழ்ந்துள்ளன, மேலும் 214 வழக்குகள் விசாரணைக்கு நிலுவையில் உள்ளன" என்று திரு வடெடிவார் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆறு மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு தொகுப்பு இருப்பதாகவும், அங்கு விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் பதிவாகியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக எம்.எல்.சி பரினே ஃபியூக் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில்., "நாக்பூர் மற்றும் அமராவதி பிரிவுகளின் பதினொரு மாவட்டங்களில் 2019-ஆம் ஆண்டில் மட்டும் 1,286 உழவர் தற்கொலைகள் பதிவாகியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மூன்று கட்சிகள் கூட்டணியான விகாஸ் அகாடி தலைமையில் நடைப்பெற்று வரும் மாநில அரசு சமீபத்தில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. எனினும் மாநிலத்தில் விவாசிகளின் தற்கொலை சம்பவங்கள் இதுவரை குறைந்தபாடு இல்லை.