ஜெ., நினைவிடம் விவகாரம்; வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா-வுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Last Updated : Apr 22, 2019, 07:52 PM IST
ஜெ., நினைவிடம் விவகாரம்; வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! title=

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா-வுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்ட கூடாது எனவும், மக்களின் வரிப்பணத்தை தமிழக அரசு இதற்காக செலவிட கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முன்னர் 23-1-2019 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாகவே அவர் இறந்து விட்டார் என்பதால் மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சின் கன்னா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. 'இவ்வழக்கின் மனுதாரர் நேரில் ஆஜராகி அளித்த வாக்குமூலத்தின்படியும் அவர் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையிலும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. 

அதன்படி இவ்விவகாரத்தில் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் தாங்கள் தலையீடு செய்ய விரும்பவில்லை எனவும்,  இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்து உத்தரவு பிரப்பித்துள்ளனர்.

Trending News