இன்றைய இளைஞர்கள் அராஜத்தை விரும்புவதில்லை: பிரதமர் மோடி

இன்றைய இளைஞர்கள் அராஜகப் போக்கை விரும்புவதில்லை என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 29, 2019, 01:07 PM IST
இன்றைய இளைஞர்கள் அராஜத்தை விரும்புவதில்லை: பிரதமர் மோடி title=

இன்றைய இளைஞர்கள் அராஜகப் போக்கை விரும்புவதில்லை என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றியதாவது,

> அனைத்து இந்தியர்களுக்கும் எனது புத்தாண்டுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

> 2019 ஆம் ஆண்டு விடைபெற உள்ளது. நாம் அனைவரும் புதிய ஆண்டில் நுழைவதற்கு மட்டுமல்லாமல் ஒரு புதிய தசாப்தத்திற்கும் நுழைய தயாராக உள்ளோம். 21 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த நூற்றாண்டு தொடர்பான அனைத்து சிக்கல்களைப் புரிந்துகொண்டு வளர்ந்து வரும் மக்கள் இவர்கள்.

> இன்றைய இளைஞர்கள் சமூக ஊடக தலைமுறை என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவுக்கு இளைய தலைமுறை மீது நம்பிக்கை உள்ளது. இந்த தலைமுறை மிகவும் திறமையானது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

> இன்றைய இளைஞர்கள் ஒழுங்கான அமைப்பு முறையை விரும்புகின்றனர். இளமைக்கால பயன்பாட்டை நம்பியே ஒருவரின் எதிர்காலம், வாழ்க்கை ஆகியவை உள்ளது. இந்தியாவை நவீன மயமாக்குவதில் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள். 

> அராஜகப் போக்கை இளைஞர்கள் வெறுப்பது தெளிவாகத் தெரிகிறது. குடும்ப அரசியல், சாதி அரசியல், வேண்டியவர் - வேண்டாதவர் பாகுபாடு போன்றவற்றை இளைஞர்கள் விரும்புவதில்லை.

> கல்வி நிலையங்களில் படிப்பை நிறைவு செய்த பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது சுகமான அனுபவம். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்வி நிலையங்களில் நூலகம் போன்றவற்றை அமைத்துத் தரலாம்.

> உள்ளூர் பொருட்களை வாங்குவோம், உள்ளூர் பொருட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

 

 

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது மாதாந்திர நிகழ்ச்சியான "மான் கி பாத்" (Mann Ki Baat) மூலம் மீண்டும் நாட்டு மக்களுடன் உரையாற்றியுளார். இது பிரதமர் மோடியின் நிகழ்ச்சியின் 60 வது அத்தியாயம் ஆகும். இதன் மூலம், இது 2019 ஆம் ஆண்டின் கடைசி அத்தியாயமாகவும் இருக்கும்.

முன்னதாக, கடந்த மாதம் நவம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான "மான் கி பாத்"தில் "ஃபிட் இந்தியா இயக்கம் முதல் 'பிளாஸ்டிக் இலவச இந்தியா வரையிலான பல்வேறு விஷயங்களையும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பையும் குறிப்பிட்டு பேசினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாடுவதற்காக "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதி (விஜயதசமி) தனது முதல் உரையை பிரதமர் தொடங்கினார்.

மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News