தார்வார்: திருமணம் நிச்சயமான 12 நாளிலேயே கணவனின் சுயரூபத்தை அறிந்து புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் அருகேயுள்ள அசோக் நகர் பகுதியில் வசித்து வருபவர் பவித்ரா(25) .இவருக்கும் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த அபினந்தன் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்வதாய் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு , கடந்த மாதம் 1-ம் தேதியன்று குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது .
ALSO READ தில்லியில் காற்று மாசு: லாக்டவுன் அறிவிக்கப்படுமா; உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..!
இப்போது திருமணத்திற்கு முன்பும்,பின்பும் ஜோடிகள் ஒன்றாக இணைந்து விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷுட்களை நடத்துவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் இந்த புது ஜோடி போட்டோஷூட் நடத்துவதற்காக பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று ஒவ்வொரு லொகேஷனாக செலக்ட் செய்து போட்டோ எடுத்தனர். அப்போது அந்த புது மாப்பிளை அபிநந்தன் திருமணத்திற்கு முன்னரே புதுப்பெண் பவித்ராவிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் . இதனை சற்றும் எதிர்பாராத மணப்பெண் பவித்ரா அதிர்ச்சியடைந்தார் . பின்னர் அபினந்தினின் இந்த செயலால் கோபடைந்தவர், அவரை தடுத்து நிறுத்தி பயங்கரமாக திட்டியுள்ளார்.
அதனால் ஆத்திரம் அடைந்த அந்த மணமகன் அபிநந்தன் , பவித்ராவை கடுமையாக திட்டியதோடு அவரை தாக்கியுள்ளார். மேலும் இந்த பவித்ரா எதிர்ப்பு தெரிவித்த இந்த சம்பவத்திலிருந்து அபிநந்தன் சுற்றுலா சென்ற இடத்தில வைத்து பவித்ராவை கொடுமைப்படுத்தி இருக்கிறார். தனது திருமணம் குறித்து பல கனவுகளை கண்டிருந்த பவித்ரா அபிநந்தனின் இந்த செயலால் மனமுடைந்து போனார் . மேலும் திருமணத்திற்கு முன்னரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்கிறாரே, இவரை நாம் திருமணம் செய்து கொண்டால் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று பயந்துள்ளார்.மேலும் இதுகுறித்து வீட்டில் கூறினால் என்னாகுமோ என்றும் யோசித்து இருக்கிறார் .
அதனையடுத்து போட்டோஷூட் முடித்து வீட்டிற்கு வந்த அவர் யாரும் இல்லாத பார்த்து ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் . இதனை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ தில்லியில் காற்று மாசு: லாக்டவுன் அறிவிக்கப்படுமா; உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR