புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புபடையினரால் சுட்டுக்கொலை...
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் போர்த்தொடும் கடைகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் பிங்லான் பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர்.
#JammuAndKashmir : Two terrorists have been killed during encounter between terrorists and security forces, in Pinglan area of Pulwama district. Operation still in progress.
— ANI (@ANI) February 18, 2019
இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையோருக்கு பயங்கரவாதிகள் இருவரும் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கின்றார்களா என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.
கடந்த வியாழக்கிழமை (பிப்., 14) ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சார்ந்த சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகிய இரு வீரர்கள் உட்பட 44 CRPF வீரர்கள் பலி ஆனார்கள். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தையும், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது...