பசுவை காப்பதை விட்டுட்டு; வீரர்களை காப்பாற்றவும் - மோடி அரசை விமர்சித்த உத்தவ் தாக்ரே

Last Updated : May 4, 2017, 02:43 PM IST
பசுவை காப்பதை விட்டுட்டு; வீரர்களை காப்பாற்றவும் - மோடி அரசை விமர்சித்த உத்தவ் தாக்ரே title=

இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் தலைகளை துண்டித்து, உடல்களை சிதைத்துள்ள பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க திராணியற்ற அற்ற அரசாக பாஜக அரசு உள்ளது என கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே கண்டனம் தெரிவித்துள்ளார். 

படை வீரர்களை பலிகொடுத்துவிட்டு பசுக்களை காப்பாற்றும் பயனற்ற ஆட்சி மத்தியில் இருப்பதாக சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கூறியுள்ள அவர், தைகிரியம் இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத்தேர்தல் நடத்த பாஜக தயாரா? எனவும் உத்தவ் தாக்ரே சாவல் விடுத்துள்ளார். 

பசுக்களை பாதுகாப்பதைவிடவும் முக்கியமானது நாட்டை காப்பாற்றுவது என கட்சி தொண்டர்களிடம் பேசுகையில் அவர் கூறியுள்ளார். கட்சி தலைவரின் பேச்சு என்பதால் அதை பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது என்று கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

Trending News