மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரொனா தொற்று உறுதி...!!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 09:29 PM IST
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்றூ இருப்பதௌ உறுதி செய்யப்பட்ட பிறகு, தற்போது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோஒனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • முன்னதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
  • கர்நாடக எதிர் கட்சி தலைவர் சித்தாராமையாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரொனா தொற்று உறுதி...!! title=

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
முன்னதாக அவரது ஊழியர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த பின்னர் மத்திய அமைச்சர் சுயமாக தனிமையில் இருந்தார்.

புதுடெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குப் பிறகு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவல்களின் படி, அவர் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ | கவலை வேண்டாம்.... வெந்நீர் கொரோனாவை கொன்று விடும்: ரஷிய விஞ்ஞானிகள்

கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னதாக அவரது அமைச்சகத்தின் ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியான பின்னர் மத்திய அமைச்சர் குவாரண்டைனில் இருந்தார்.

முன்னதாக, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு, கோவிட் -19  தொற்று இருப்பது உறுதியான பின்னர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்

இதற்கிடையில், அதே மணிப்பால் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பாவும் சிகிச்சை பெற்று வருகிறார்.

ALSO READ | விற்பனை  சரிந்தாலும் இனி ஏற்றம் தான்... சமூக இடைவெளியை நம்பும் வாகன நிறுவனங்கள்  

கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு எடியுரப்பா அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மேலும்  அவரது உடல் நிலையும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சமீப காலங்களில், அரசியல் தலைவர்கள், திரப்பட பிரபலங்கள் என அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது.

Trending News