காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வரும் நிலையிலும், தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், இரு மாநில அரசுகளை அழைத்துப் பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளது!
இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது மேகதாது அணை பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேசுவதாக நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.
CM HD Kumaraswamy met Union Minister of Water Resources, @nitin_gadkari today&discussed Mekedatu Project progress.
The CM brought to the notice of Mr Gadkari that TN has raised objection against the project although it's beneficial to both the states and specifically to TamilNadu pic.twitter.com/ch1SPj0TwE— CM of Karnataka (@CMofKarnataka) December 26, 2018
இதுதொடர்பாக கர்நாடக அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில்... "முதல்வர் குமாரசாமி உடனான சந்திப்பின்போது, மேகதாது அணையால் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புக் கொண்டார். மேலும், இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் கட்கரி உறுதியளித்தார்" என தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைப்பெற்று வரும் நிலயைஇல் மேகதாது அணைப் பிரச்னையை முன்வைத்து அதிமுக மற்றும் திமுக MP-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுத்துள்ளது. இத்தகைய சூழலில், மத்திய அரசு இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வது குறிப்பிடத்தக்கது.