பாலியல் பலாத்காரம் எதிர்கொள்கிறீர்களா? தொந்தரவு இல்லாத அனுபவத்திற்காக கற்பழிப்பாளருக்கு ஆணுறை ஒப்படைக்கவும்.
ஆமாம், பாலியல் பலாத்காரத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் போது பெண்களின் சொந்த பாதுகாப்புக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட சமீபத்திய ஆலோசனை இதுதான். கற்பழிப்பாளருக்கு ஆணுறை ஒன்றைக் கொடுத்துவிட்டு, அவனுடைய "பாலியல் ஆசையை" நிறைவேற்றும் படி பிரபல இயக்குநர் ஒருவர் பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
திரைப்பட கலைஞர் டேனியல் ஷ்ரவன் சமீபத்தில் சமூக ஊடகத்தில் தெரிவித்த இந்த கருத்து தற்போது நாட்டு மக்கள் பலரது எதிர்ப்பினை பெற்றுள்ளது. அவரது கருத்தில் அவர் குறிப்பிடுகையில்., "பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தங்களுடன் ஆணுறைகளை எப்போதும் வைத்திருத்தல் அவசியம் ஆகும். கற்பழிப்பு என்பது ஒரு தீவிரமான விஷயம் அல்ல, ஆனால் கற்பழிக்கு பின்னால் கொலை என்பது மன்னிக்க முடியாதது. எனவே கற்பழிப்பு பின்னான கொலையினை கைவிடவும்" என ஷ்ரவன் குறிப்பிட்டுள்ளார்.
Ideas going around.
Some of this content is in Telugu. Basically the ideas these men have given is - cooperate and offer condoms to prevent murder after rape, women’s organizations are the reason for rape.
Rape is not heinous, murder is. pic.twitter.com/2eqhrQA02T— Chinmayi Sripaada (@Chinmayi) December 3, 2019
மேலும் கற்பழிப்புக்கான கடுமையான தண்டனைகளே கற்பழிப்பாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்களை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக அவர்களைக் கொன்றதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக "வன்முறை இல்லாமல் கற்பழிப்பு" சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்களை மிருகத்தனமான கொலையிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரே வழி இது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த 26-வயது இளம்பெண்ணின் உடல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் ஷ்ரவனின் இந்த பரிந்துரை வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் சம்பவத்தை தொடர்ந்து தேசம் கொதித்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பிரச்சினையை தீர்க்க இந்தியர்கள் சில வினோதமான பதில்களைக் கொண்டு வருகின்றனர். முதலாவதாக, ஒரு சமாஜ்வாடி கட்சி எம்.பி., கற்பழிப்பாளர்களை பகிரங்கமாகக் கொலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மற்றும் பாஜக எம்.பி. போன்றவர்கள் பாலியல் பலாத்காரர்களை பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஆயினும் தெலுங்கானாவின் சட்ட அமைச்சர் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும்போது தனது சகோதரியை அழைப்பதற்கு பதிலாக 100 பேரை அழைத்திருக்க வேண்டும் என தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்த வரிசையில் தற்போது ஷ்ரவன் இணைந்துள்ளார். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் "கொடூரமான மரணத்திற்கு" பின்னால் "சமூகமும் பெண்கள் அமைப்புகளும் முக்கிய குற்றவாளிகள்" என்று மேலும் பரிந்துரைத்துள்ளார். அவரது பதிவின் சில முக்கிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது....
- 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு குறித்து கல்வி கற்பிக்கப்பட வேண்டும், அதாவது ஆண்களின் பாலியல் ஆசைகளை மறுக்கக் கூடாது என்று கற்பிக்கப்பட வேண்டும்.
- 'நிர்பயா சட்டம்' வன்முறை கற்பழிப்பைக் கட்டுப்படுத்த உதவாது, எனவே பெண்கள் தங்கள் பாதுகாப்பை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, பாலியல் பலாத்காரத்தில் இருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள ஆணுறைகளை கையில் எடுத்து செல்ல வேண்டும்.
- கொலையை விட கற்பழிப்பு சிறந்தது. கொலை ஒரு பாவம், கற்பழிப்புக்கு பின்னர் கொலை என்பதை கைவிட வேண்டும்.
- எளிய தர்க்கம்: ஆண்களின் பாலியல் ஆசைகள் கற்பழிப்பால் நிறைவேறும் போது, அவர்கள் பாதிக்கப்பட்டவரைக் கொல்ல மாட்டார்கள்.
ஷ்ரவன் மட்டும் இல்லை. சமூக ஊடகங்களில் பலருக்கு இதே போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஷர்வனின் பதிவை தொடர்ந்து அவரது முகப்புத்தகம், ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.