ஆதார் எண் கட்டாயமா? நாளை தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்க உள்ளது. 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 25, 2018, 05:36 PM IST
ஆதார் எண் கட்டாயமா? நாளை தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம்
Zee Media

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் சிம் கார்டு, வங்கி கணக்கு உட்பட பல சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. 

ஆதார் மூலம் தனி நபரின் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால், ஆதார் அடையாள எண் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்ததோடு, சிம் கார்டு, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைகப்பதற்க்கான காலகெடுவை நீடித்தது.

இந்நிலையில், நாளை ஆதார் எண்ணுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பில் ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்பது பற்றி உச்ச நீதிமன்றம் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.