33 சதவீதம் இட ஒதுக்கீடு - கனிமொழி தலைமையில் பேரணி

Last Updated : Mar 20, 2017, 12:18 PM IST
33 சதவீதம் இட ஒதுக்கீடு - கனிமொழி தலைமையில் பேரணி title=

பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி வகை செய்வதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் இந்த சட்டம் நிறைவேறினால்தான் பாராளுமன்றத்திலும் 33 சதவீதம் பெண்கள் இடம் பெற முடியும் என்ற நிலை உள்ளது. சில கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த விரைவு சட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று திமுக பலமுறை வலியுறுத்தி வந்தது. 

இந்நிலையில், இன்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணிக்கு திமுக மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்கினார். ஏராளமான பெண்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட பெண்கள் காலம் தாழ்த்தாமல் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பியபடி பேரணி சென்றனர்.

Trending News