ஹைதராபாத்: ஆந்திர மாநில முதலமைச்சரின் சகோதரி YS ஷர்மிளா புதிய பிராந்திய கட்சியை இன்று தொடங்குகிறார். ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஹைதராபாத்தில் கட்சியைத் தொடங்குகிறார்.
கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தினால், நிகழ்ச்சியில் குறைந்த அளவு மக்களே கலந்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சிக்கொடியை YS ஷர்மிளா வெளியிடுவார்.
தனது தந்தையும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளான இன்று ஷர்மிளா புதிய கட்சியைத் தொடங்குகிறார். ஷர்மிளாவின் தாயார் ஒய்.எஸ். விஜ்யம்மாவும், கட்சி விசுவாசிகளும், பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள கட்சியின் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
YS ஷர்மிளாவின் தந்தை ஒய்.எஸ்.ராஜேசேகர ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சகோதரி ஷர்மிளாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.
Also Read | மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
கடந்த சில மாதங்களாகவே ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகிக்கும் தனது சகோதரர் ஜெகன்மோகனின் அரசாங்கத்தை ஷர்மிளா சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். அதன் நீட்சியாக, ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்த ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆரின் பாதையில் நடக்க விரும்புவதாகவும், எனவே தான் அரசியலில் இறங்குவதாகவும் கூறினார்.
"சரியாக, 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 9, செவெல்லா (Chevella) என்ற ஊரில் இருந்து, ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தனது பாத யாத்திரையைத் தொடங்கினார், அவர் ஒவ்வொரு நாளும் 22 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். செல்லும் வழித்தடங்களில் எல்லாம் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு, நாட்டு நடப்பை நிதர்சனமாக ஒய்.எஸ்.ஆர் புரிந்துக் கொண்டார். அந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே அவர் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கினார். ஒய்.எஸ்.ஆரின் பாதையில் நடக்க விரும்புகிறேன். எனவே முதல்முறையாக அரசியலில் காலடி எடுத்து வைக்கிறேன்" என்று ஷர்மிளா தெரிவித்திருந்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு எதிர்க்கட்சி இல்லாததைக் குறிப்பிட்ட ஷர்மிளா, "ஒய்.எஸ்.ஆரின் அதே ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதே எனது நோக்கம்" என்றும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 119 இடங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் 2023 இல் நடைபெற உள்ளது. 2018 சட்டமன்றத் தேர்தலில், கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
Also Read | அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR